ஒரே நாளில் கொரோனாவால் இன்று 147 பேர் உயிரிழப்பு!


தமிழகத்தில் இன்று(மே 1) ஒரே நாளில்19,588 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 11,86,344 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இன்று 147 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 14,193 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 92 பேரும், தனியார் மருத்துவமனையில் 55 பேரும் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் 17,164 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 10,54,746 பேர் குணமடைந்துள்ளனர். 1,17,405 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மட்டும் 1,51,452 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 11,951 பேர் ஆண்கள், 7,637 பேர் பெண்கள்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 5,829 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன்மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,39,797 ஆக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டில் 1445 பேரும், கோவையில் 1257 பேரும், திருவள்ளூரில் 779 பேரும், மதுரையில் 711 பேரும், நெல்லையில் 812 பேரும், தூத்துக்குடியில் 638 பேரும், திருச்சியில் 528 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

No comments