நாளை சூரியன் உதிக்குமா! கருணாநிதியை வணங்கிய ஸ்டாலின்!

 


தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்து. சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என ஐந்துமுனை போட்டி நிலவுகிறது. இதில் திமுக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தனது குடும்பத்தினருடன் மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற அவர், மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பும், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பும் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்

No comments