இலங்கையும் இந்தியா போன்றாகலாம்?



இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 09 பேர் உயிரிழந்துள்ளர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 687 ஆக அதிகரித்துள்ளது.

அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 109,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்குமாயின் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதைப் போன்றதொரு நிலைமை இலங்கையிலும் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது.

எனவே, அபாயத்தை தவிர்த்துக்கொள்வதற்கு மக்கள் சார்பில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்று தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வெள்ளியன்று 1600 இற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

இந்தியாவில் தற்போதுள்ள நிலைமையைக் கவனத்தில் கொண்டு முன்னாயதங்களை மேற்கொள்வதன் மூலம் இந்த நிலைமையை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும். ஆனால், அங்குள்ள நிலைமையைப் போன்று ஏற்படக்கூடிய அபாயமும் உண்டு.

எனவே, தொற்றுக்கான ஏதேனுமொரு அறிகுறி காணப்படுபவர்கள் அவர்கள் வீடுகளிலேயே தங்கியிருக்காமல் வைத்தியசாலைக்கு வருகை தந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

எனினும், ஏதேனுமொரு வகையில் தொற்றாளர் எண்ணிக்கை பாரியளவில் அதிகரிக்குமானால் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதைப் போன்றதொரு நிலைமை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments