வீதியில் அடிபட்டுக்கிடந்த சிறுத்தை!!


வீதி விபத்தில் காயமடைந்த சிறுத்தை காவல்துறையினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பாக காட்டுக்குள் விடப்பட்டுள்ளது.

தர்மபுரம் நெத்தலியாற்றுப் பகுதியில் நேற்றைய தினம் 09.05.2021 மாலை சிறுத்தையானது வீதியைக் கடக்க முற்பட்ட வேளை விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த சிறுத்தை வீதியால் சென்ற டிப்பர் வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் குறித்த சிறுத்தை காவல்துறையினரால் மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டதன்  பின்னர் சிறுத்தை பாதுகாப்பாக அருகில் உள்ள காட்டுப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளது.

No comments