ஊடகவியலளார்களிற்கும் ஊசியாம்?கொவிட் தடுப்பூசி பெறுவதற்கு அரசாங்கத்திடம் நிதியில்லை என சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கொவிட் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு தேவையான நிதி அரசாங்கத்திடம் உள்ளது. நாடு பூராகவும் உள்ள 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நாட்டில் உள்ள சகல மக்களுக்கும் தடுப்பூசி வழங்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

No comments