48526 தூய்மையான வாக்குகளை அடித்து தூக்கிய சீமான்!


தமிழக சடடமன்ற தேர்தலில்  பெரிதும் எதிபார்க்கப்படட திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கே.பி.சங்கர், அதிமுக சார்பில் குப்பன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் போட்டியிட்டனர்.

 வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே பல்வேறு கட்சிகளின் ஆதரவோடு கூடடணியாக களமிறங்கிய திமுக வேட்பாளர் கே.பி.சாமி முன்னிலை வகித்து வந்தார். இதனால், தனித்தே கூடடணி இன்றி போட்டியிடட சீமான் 3-வது இடத்தில் தொடர்ந்து வந்தார்.

அனைத்து சுற்று வாக்குகளும் நிறைவடைந்த நிலையில் திமுக வேட்பாளர் கே.பி.சாமி 27 ஆயிரத்து 291 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் குப்பனை வீழ்த்தினார். மூன்றாம் இடம் பிடித்த சீமான், 48526 வாக்குகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்க்கு சமூக வலைத்தளம் எங்கும் அந்த தொகுதியின் மக்களுக்கு  நாம்தமிழர் கட்சியினர் நன்றி தெரிவித்து , இது பணத்துக்கும் , சலுகைக்கும் கிடைக்காத தன்மானத்  தமிழரின் வாக்கு என்று மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.அவரைப்போலவே தமிழகம் முழுவதும் கூடுதலான தொகுதிகளில் நாம்தமிழர் கட்சி தனித்து கூட்ட்ங்கள் இன்றி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தது.

No comments