ஒத்துழைக்க மறுத்தமைக்கு உள்ளே!

வடமராட்சியின் கரவெட்டி ஞானம்ஸ் விளையாடுக் கழக பயிற்றுநர் பொலீஸாரால் கைது செய்யப்பட்டு  கடுமையாக எச்சரிக்கப்பட்டு

விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை பொதுச் சுகாதார பரிசோதகரால் சுமார் 22 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை துன்னாலை பகுதியில் நடைபெற்றது. 

தற்போது கொரோனா அதிகரிப்பு காரணமாக விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகள் இடைநிறுதப்பட்டுள்ளது. இந்நிலையில் கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக் கழக வீரர்கள்  கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளதையடுத்து அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர் பார்வையிட்ட போது சுமார் 40 ற்கும் மேற்பட்டோர் மைதானத்தில் காணப்பட்டுள்ளனர். 

குறித்த பயிற்றுவிப்பாளருக்கும், வீரர்களுக்கும் கொவிட் தொற்று காரணமாக பயிற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளது.  எனவே தாங்களும் பயிற்சிகளை நிறுத்துமாறு பொதுச் சுகாதார பரிசோதகரினால் அறிவிக்கப்பட்டது.

அதனை ஏற்க மறுத்ததுடன் பொதுச் சுகாதார பரிசோதகருடன் வாய்த்தர்கத்திலும் பயிற்றுநர் ஈடுபட்டுள்ளார். இதனால் பொதுச் சுகாதார பரிசோதகரால் சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து  விசாரணை மேற்கொண்ட நெல்லியடி பொலீஸார் குறித்த பயிற்றுநரை கைது செய்து, கடுமையாக  எச்சரிக்கப்பட்டதையடுத்து விடுதலை செய்துள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்ட பயிற்றுவிப்பாளர் உட்பட 22 பேர் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments