புதிய கலக்கல் காமெடியன் டக்ளஸ்!
மூளை மாறாட்ட கதைகளால் மேர்வின் சில்வாவை முந்தி தமிழ் அரசியல் பரப்பை கலகலப்பாக்கி வருகிறார் டக்ளஸ்.

தெற்கில் மேர்வில் சில்வா பாணி சமாளிப்பு அரசியலில் குதித்துள்ள டக்ளஸ் இராணுவ சோதனை சாவடி இருப்பது எமது வசதிக்காகவே என்று இன்று புதிய விளக்கமளித்துள்ளார்.

இன்று வவுனியாவிற்கு வருகை தந்திருந்த போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டினை முடக்கம் நிலைக்கு உட்படுத்தினால் நாடு பட்டினியில் மரணிக்க வேண்டி வரும்.

அதற்காகதான் எமது அரசாங்கம் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை சுகாதார முறைகளில் பேணுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக வீதியிலே இருக்கின்ற இராணுவ சோதனை சாவடிகளில் இராணுவத்தினர் முகக்கவசம் அணியாதவர்களை மறித்து அணிந்து செல்லுமாறு அறுவுறுத்தி வருகின்றனர்.

மேலும் இராணுவச்சோதனை சாவடிகள் எங்களிற்கு வசதியாக இருப்பதுடன் நாங்கள் அதனை வசதியாக மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர அதனை கெடுபிடி என்று அதனை நோக்கக்கூடாது. அவர்கள் முகக்கவசம் அணியாமல் செல்லுமாறு அறிவுறுத்து வருகின்றனர். அதனை சொல்லுவதற்கும் ஒருவர் தேவைதானே அதனைதான் அவர்கள் செய்து வருகின்றனர். ஆகவே சோதனை சாவடி இருப்பதால் முகக்கவசம் அணிய வேண்டும் என அனைவரும் கவனமாக இருப்பார்கள். அத்தோட சோதனை சாவடி நிரந்தரமாக்க வேண்டிய தேவை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் காணாமல் போனோர் விவகாரம்,இலங்கை கடலை வாடகைக்கு விடுவதென சர்ச்சை கருத்துக்களை கூறி மேர்வின் சில்வாவிற்கு போட்டியாகிவருகிறார் டக்ளஸ்.


No comments