வானதியிடம் வீழ்ந்தார் கமலஹாசன்!


கோவை தெற்கு தொகுதியில், பெருத்த எதிர்பார்ப்போடு பாஜக போட்டியிட்டது. அத்தொகுதியில், அக்கட்சியின் முக்கிய பிரமுகர் வானதி சீனிவாசன் களமிறக்கப்பட்டார். அவருக்கு எதிர்முகமாக அத்தொகுதி காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார் களமிறங்கினார். அடுத்து  மக்கள் நீதிமய்யம் சார்பில் கமலஹாசன் முதன்மை வேட்ப்பாளராக களமிறங்கினார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, இத்தொகுதிக்கு, உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்தபோது, சங்பரிவார கும்பல்கள் வன்முறையில் ஈடுபட்டனர். எனவே, பாஜக இங்கு நிச்சயம் தோற்கும் என்று சொல்ல ப்பப்பட்டிருந்த நிலையில்.

ஆனால், காலை முதலே இங்கு கமலுக்கு, வானதிக்கு இழுபறி நீடித்துவந்த நிலையில், இறுதியாக, 1728 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

No comments