திருகோணமலை பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி! நால்வர் கவலைக்கிடம்


அனுராதபுரம் – திருகோணமலை பிரதான வீதியின் நொச்சியாகம மொரகந்த பிரதேசத்தில் புத்தளம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் வாகனம் ஒன்று மேலும் சில வாகனங்களுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக வேகத்தில் பயணித்துள்ள கொள்கலன் வாகனம் இரண்டு உந்துருறுளிகளிலும் மற்றும் ஈருறுளியுடனும் மோதியுள்ளது.

பின்னர் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக பாரவூர்த்தி ஒன்றில் மோதி, அருகில் இருந்த பாதுகாப்பு சுவர் மற்றும் மின் கம்பத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் நொச்சியாகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments