இதுதான் கோத்தாவின் கட்டில்!இலங்கையில் கொரோனாவால் மரணமடைவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துவருகின்றது.

ஆனால் எந்தவொரு முன்னேற்பாடுமின்றி இராணுவத்தை வைத்து மக்களை ஏமாற்றிவருகின்றது கோத்தபாய அரசு என அம்பலப்படுத்தப்பட்டும் வருகின்றது.

இராணுவ வைத்தியாசாலைக்கு தயாரிக்கப்பட்டுள்ள அவரச சிகிச்சை கட்டிலை அம்பலப்படுத்தியுள்ளனர் ஊடகவியலாளர்கள்.

நேற்று சனிக்கிழமை மட்டும் 22 மரணமடைந்தமையினையடுத்து இதுவரை 786 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக நேற்று 16 ஆண்களும் 6 பெண்களும் நேற்று மரணமடைந்தனர்.

ராகமை, கடவத்தை, முல்லேரியா, தலவத்துகொட, மொரட்டுவை, லுணுகெட்டியமடித்த, பதியபெலல்ல, கொழும்பு 08 புளத்கொ{ஹபிட்டிய, {ஹன்னஸ்கிரிய, கட்டுகஸ்தோட்டை, ஹல்கிரன்ஒய, ஹொரம்பெல்ல, கணேமுல்ல, குருதெனிய, கடவத்தை, பிபிலை, அகலவத்தை, வலஹன்துவ, போத்தல, கலகெதர, கன்னொருவை போன்ற இடங்களில் மரணம் சம்பவித்துள்ளது.


No comments