வான்வழித் தாக்குதல் மூலம் தரைமட்டமானது காசா கோபுரத்தை


காசாப் பகுதியில் அமைந்துள்ள கமாஸ் அமைப்பின் அரசியல் அலுவலகமாகச் செயற்பட்டு வந்த காசா கோபுரம் (13 மாடி கட்டிடம்) மீது இஸ்ரேல் வான்படையினர் நடத்திய தாக்குதலில் அக்கட்டிடம் தரைமட்டமாகியது.

இத்தாக்குதல் நடத்துப்படுவதற்கு முன்னர் அங்கிருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை அல்-அக்‌ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் மோதல் வெடித்தது. பாலஸ்தீனர்கள் கற்கலைக்கொண்டு தாக்கினர். இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தினர். இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். இதுவரை 700 பேர் காயமடைந்துள்ளதாக அல்ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில் ஹாமாஸ் அமைப்பினர் உள்பட 30 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து நேற்று முழுவதும் இருதரப்பும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். 

பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா  தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நேற்று முன்தினம் ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்தது. இஸ்ரேலிய பதிலடி தாக்குதலில் ஹாமாஸ் அமைப்பினர் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து நேற்று முழுவதும் இருதரப்பும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

காசாப்பகுதியில் அமைந்துள்ள காசா டவர் என்று என்று அழைக்கப்படும் கட்டிடம் தாக்கி அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து காமாஸ் போராளிகள் 130 உந்துகணைகளை இஸ்ரேல் இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ் மற்றும் பிற இஸ்ரேலிய நகரங்கள் மீது ஏவினர். இதில் மூன்று இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹமாஸ் அமைப்பு நடத்திய உந்துகணைத் தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளர். இஸ்ரேலின் தலைநர் டெல் அவிவ் நகரில் ஒருவரும், அஷ்கிலோன் நகரில் இருவரும் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலியர்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கமாசின் தாக்குதலில் பேருந்து, வாகனங்கள், கட்டிடங்கள் தீக்கிரையானது எனத் தெரிவிக்கப்படுகிறது.No comments