குருந்தாவரோக ரஜமஹா விகாரைக்கு கொரோனா இல்லை!ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்தியிருந்த முல்லைத்தீவு குருந்தூர்மலையில்  குருந்தாவரோக ரஜமஹா விகாரை நிறுவப்பட்டு, இன்று முதல் வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளது.

சுகாதார வழிகாட்டுதல் எல்லாம் புறந்தள்ளப்பட்டு முல்லைதீவு குருந்தூர் மலையில் நூற்றுக்கணக்கில் படையினர் மற்றும் பிக்குகளது பிரசன்னத்துடன் விகாரை நிறுவப்பட்டுள்ளது.

முல்லைதீவு நீதிமன்றம் குருந்தூர்மலையில் வழிபாடு  தவிர்ந்த எத்தகைய கட்டுமானங்களையும் முன்னெடுக்க கூடாதென்ற உத்தரவை புறந்தள்ளி நிர்மாண வேலைகள் படைதரப்பால் முன்னெடுக்கப்பட்டமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
No comments