இஸ்ரேல் மீது கமாஸ் பதில் தாக்குதல்! 130 உந்துகணைகளை ஏவியது! 3 இஸ்ரேலிகள் பலி!


இஸ்ரேலால் காசாப்பகுதியில் அமைந்துள்ள காசா டவர் என்று என்று அழைக்கப்படும் கட்டிடம் தாக்கி அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து காமாஸ் போராளிகள் 130 உந்துகணைகளை இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ் மற்றும் பிற நகரங்கள் மீது ஏவினர். இதில் மூன்று இஸ்ரேலியர்கள் உயிரிழந்துடன் பல் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.அத்துடன் பேருந்து, வாகனங்கள், கட்டிடங்கள் தீக்கிரையானது.

ஹமாஸ் உந்துகணைத் தாக்குதலில் இஸ்ரேலின் தலைநர் டெல் அவிவ் நகரில் ஒருவரும், அஷ்கிலோன் நகரில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

பெரும்பாலான உந்துகணைகளை இஸ்ரேலின் வான்காப்பு ஏவுகணைகரள சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது.

No comments