போர்மேகம் சூழ்ந்த ஹாசா பகுதி! 130 க்கும் அதிகமானோர் பலி!

 


இஸ்ரேல் படையினருக்கும் பலஸ்தீன ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தொடரும் முதல் காரணமாக 100க்கும் அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இரு தரப்புக்கும் இடையே அமைதியைக் கொண்டுவர அமெரிக்காவும் அரபு நாடுகளும் முயற்சி மேற்கொண்டுள்ளன.

காஸாவின் வடபகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படையினருக்கும் பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 11 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த 5 நாளாக இரு தரப்புக்கும் இடையே நடந்துவரும் பரஸ்பர மோதலினால் காஸா பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 130 பேர் பலியாகியுள்ளனர்.

அவர்களில் 32 பேர் குழந்தைகள், 21 பேர் பெண்கள். மேலும் 950 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பன்னாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலில் ஒரு ராணுவ வீரர், 2 குழந்தைகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளதாக மேலும் தெரியவருகின்றது.

No comments