நயினாதீவு நாகதீப புதிய கொத்தணியா?



இலங்கை அரசு தேசிய வெசாக் கொண்டாட இருந்த நயினாதீவு கொரோனா கொத்தணியாகிவருகின்றது.

முன்னதாக நாகபூசணியம்மன் ஆலய பணியாளர் ஒருவர் சில தினங்களிற்கு முன்னர் கொரோனா தொற்றிற்கு ஆளானார்.

அவரது குடும்பத்தினருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் மனைவி, பிள்ளைகள் என குடும்பத்தில் மேலும் 4 பேருக்கு தொற்று உறுதியானது.

கொரோனா அபாயம் ஏற்பட்ட பின்னரும் வெளியிடங்களிலிருந்து நயினாதீவிற்கு வருபவர்கள் கட்டுப்படுத்தப்படவில்லை. கொரோனா அபாயமிக்க தெற்கு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து சென்றனர். எனினும், வடக்கு சுகாதார திணைக்களம் அதை கண்டு கொள்ளவில்லை.

ஏனைய தீவுப்பகுதிகளான எழுவைதீவு மற்றும் அனலைதீவு பகுதிகளிற்குள்  வெளியார் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனினும், நயினாதீவு திறந்து விடப்பட்டதால் அபாய நிலை உருவாகியுள்ளது.

இலங்கை கடற்படையின் பாதுகாப்பில் வாழ்ந்துவரும் நாகதீப விகாராதிபதிக்கு பயந்தே அதிகாரிகள் அடக்கிவாசிப்பதாக சொல்லப்படுகின்றது.


நயினாதீவில் தொற்றிற்குள்ளானவர்கள் படகு பயணம் உள்ளிட்ட பொது போக்குவரத்தையே பயன்படுத்தி வந்துள்ளமை அச்சத்தை தோற்றுவித்துள்ளது.


No comments