குவைத்தில் 4 இலட்சத்துக்கு அதிகமானோர் வதிவிட உரிமம் இரத்து!



குவைத்தில் ஏராளமான வெளிநாட்டவர் பணி புரிந்து வருகின்ற நிலையில்,  இவர்களில் குடியுரிமை பெறாத அனைவருக்கும் இங்கு வசிக்கக் குடியிருப்பு உரிமங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.   இங்கு பலரும் தற்காலிக குடியிருப்பு உரிமங்கள் பெற்று சட்ட விரோதமாகத் தொடர்ந்து தங்கி வருகின்றனர்.   இவர்களில் வீட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கண்டறிந்து குடியிருப்பு உரிமங்கள் ரத்து செய்யப்படுகின்றன.  கடந்த 2020 ஆம் ஆண்டில் இது போல 4.47 லட்சத்துக்கும் அதிகமானோரில் குடியுரிமை உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன,.   இவர்களில் 2.76 லட்சம் பேர் தனியார் நிறுவன பணியாளர்கள் ஆவார்கள்.   மேலும் 14 ஆயிரம் அரசுப் பணியாளர்கள், 90 ஆயிரம் வீட்டு வேலை பணியாளர்கள், 63,000 தனிப்பட்ட மக்கள் ஆகியோர் குடியுரிமை ரத்து செய்யப்பட்டு சொந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒரு இடத்துக்குப் பணி செய்வதாக வந்து குடியுரிமை உரிமம் ரத்து ஆகியும் அரசுக்குத் தெரிவிக்காமலேயே வேறு பணிகளைச் செய்த தனியார் நிறுவன பணியாளர்கள் 42,234 பேர் ஆவார்கள்,   இதே குற்றத்தை சுமார் 12000 வீட்டு வேலை பணியாளர்களும் செய்துள்ளனர்.    கடந்த மூன்று ஆண்டுகளில் இது குறைவான எண்ணிக்கை எனக் கூறப்படுகிறது.

No comments