வக்கற்றுப்போனதா கோத்தாவின் படையணி?

ஜனாதிபதியும் அமைச்சரவை அமைச்சர்களும் பி.சி.ஆர். விவகாரங்களில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்தலுக்காக ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டு அதன் மூலம் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், ஞாயிறுக்கிழமை தெஹியத்தகண்டி பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் சிறிய ரக லொறியொன்றில் பயணிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும், இணையதள பிரதான ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது.

தொற்றாளர்களுக்கு ஆகக்குறைந்தது வான் ஒன்றைக் கூட ஏற்பாடு செய்து கொடுக்க முடியாத ஜனாதிபதி செயலணி என்ன செய்து கொண்டிருக்கிறது? இதன் மூலம் என்ன பயன்? ஏன கேள்வி எழுப்பியுள்ளது ஜேவிபி.

ஜனாதிபதி செயலணி ஒருபுறமிருக்க மறுபுறம் அமைச்சர்கள் மூவர் உட்பட விடயத்துக்குப் பொறுப்பான 6 அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவராலும் ஒவ்வொரு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இவற்றுக்கு புறம்பான வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இறுதியான ஒரு தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியாமையினால் மக்கள் குழப்பமடைந்துள்புத்தாண்டு கொத்தணி என்பதன் மூலம் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு எதனைக் கூற விரும்புகின்றது? கொரோனா கொத்தணிகளுக்கு பெயர் குறிப்பிட்டு சுட்டிக்காட்டுவது மக்களை அறிவுறுத்துவதற்காகும். ஆனால், அரசாங்கம் தற்போது உருவாகியுள்ள கொத்தணியை விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்த தவறியுள்ளது. அதனால், தான் அடிப்படையின்றி புத்தாண்டு கொத்தணி என்று பெயர் குறிப்பிடப்படுகிறது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டில் தற்போது அறிவிக்கப்படுகின்ற கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் எமக்கு சந்தேகம் நிலவுகிறது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கமும் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கம் பி.சி.ஆர். பரிசோதனைகளை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் மோசமானதொரு அரசியல் விளையாட்டை அரசாங்கம் விளையாடிக் கொண்டிருக்கிறது.

ஜனாதிபதியும் அமைச்சரவை அமைச்சர்களும் பி.சி.ஆர். விவகாரங்களில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்தலுக்காக ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டு அதன் மூலம் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், ஞாயிறுக்கிழமை தெஹியத்தகண்டி பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் சிறிய ரக லொறியொன்றில் பயணிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும், இணையதள பிரதான ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது.

தொற்றாளர்களுக்கு ஆகக்குறைந்தது வான் ஒன்றைக் கூட ஏற்பாடு செய்து கொடுக்க முடியாத ஜனாதிபதி செயலணி என்ன செய்து கொண்டிருக்கிறது? இதன் மூலம் என்ன பயன்?

ஜனாதிபதி செயலணி ஒருபுறமிருக்க மறுபுறம் அமைச்சர்கள் மூவர் உட்பட விடயத்துக்குப் பொறுப்பான 6 அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவராலும் ஒவ்வொரு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இவற்றுக்கு புறம்பான வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இறுதியான ஒரு தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியாமையினால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் ஏற்படுகின்ற மரணங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக வயதில் கூடிய முதியோருக்கும், அதன் பின்னர் முன்னிலையில் உள்ள சுகாதாரத் தரப்பினருக்கும் கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவர் தலைமையிலான அரசாங்கமும் அதனை மீறி கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளை திட்டமிடல் இன்றி சகலருக்கும் வழங்கியுள்ளது.

இதனால் இரண்டாம் கட்டமாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டியவர்கள் அதற்குரிய காலம் கடந்தும் அதனைப் பெற்றுக்கொள்ள முடியாமலுள்ளனர்- என்றார்.

No comments