இங்கிலாந்து கடற்படைக்கு உதவியாக ஜெட் பக் எனும் புதிய பிரிவு உருவாக்கம்


இங்கிலாந்து கடற்படையினருக்கு உதவி செய்வதற்காக ஜெட் பக் (Jet Pack) என்ற புதிய பிரிவு பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. ஆங்கிலக் கால்வாயில் சென்ற போர்க் கப்பலில் இருந்து சில வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஜெட் பேக் அணிந்து பறந்து காட்டினர்.

மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றைக் கிழித்துக் கொண்டு சென்ற அவர்கள் போர்க்கப்பலில் இறங்கிச் சாதனை செய்தனர்.

காற்றை அதிவேகமாக உள்ளிழுத்து பறக்கும் இந்த ஜெட் பேக் மூலம் கடத்தல், தீவிரவாத செயல்கள் போன்றவை எளிதில் முறியடிக்க முடியும் என இப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.


No comments