மரணவீடு: கூண்டோடு முடக்கம்!

பருத்தித்துறை பகுதியில் இன்று 15 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பருத்தித்துறை ஓடைக்கரைப் பகுதியில் தொற்றாளர்கள் இனங் காணப்பட்டதுடன், சில வீதிகள் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பருத்தித்துறை சுகாதார பிரிவினரால் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கொரோனா தொற்று அறிகுறிகளுடன் பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தி விட்டு அதுபற்றி தெரிவிக்காது தந்தையின் மரணச் சடங்கில் கலந்து கொண்ட மகனுக்கு கொரோனா தொற்று ஏற்படடுள்ளமை உறுதியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து அவருடன் மரணச் சடங்கில் கலந்து கொண்ட 30-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொற்று ஏற்பட்டவரின் வீட்டில் மரணச்சடங்கு இடம் பெற்றமையும் அதில் இறந்தவரின் வங்கி அதிகாரியான மகன் கலந்து கொண்டு இறுதி கிரியைகளில் ஈடுபட்டமையும் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து தொற்றாளரான வங்கி அதிகாரி அன்றைய தினம் இறுதி கிரியைகளை நடத்திய குருக்களும் மரண வீட்டில் மேள வாத்தியங்கள் மற்றும் ஏனைய உதவிகளில் அருகில் இருந்து ஈடுபட்டவர்கள் என 30 பேர் வரையில் பருத்தித்துறை பகுதியில் சுய தனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 


No comments