உருத்திபுரத்தில் கிபிர் குண்டு!கிளிநொச்சி உருத்திரபுரம் - சிவநகர் பகுதியில் இன்று இலங்கை விமானப்படையால் வீசப்பட்ட கிபீர் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் உள்ள கோவில் காணி ஒன்றில் கனரக வாகனத்தின் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது 2009 இற்கு முன் யுத்த காலத்தின் போது வீசப்பட்ட கிபீர் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

கோவில்களில் துப்புரவு பணியில் கொண்டிருந்தவர்கள் குண்னை அடையாளம் கண்டு கிளிநொச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் விசேட அதிரடி படையினர் மூலம் குண்டுசெயலிழக்க செய்யப்பட்டுள்ளது.


No comments