படம்பிடிக்க ஆசை:ஆள் உள்ளே!
முடங்கியுள்ள இலங்கை தலைநகரை படம்பிடிக்க அனுமதியுமின்றி, ட்ரோன் கமெரா ஒன்றை பறக்க விட்ட இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை- ரொபட் பிளேஸைச் சேர்ந்த 22 வயது இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்றைய தினம் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அனுமதியின்றி ட்ரோன் கமராக்களை பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments