பிரான்சின் பொபினிப் பிரதேசத்தில் மே 18 கவனயீர்ப்பு நினைவேந்தல்!

பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான 93 மாவட்டம் பொபினிப் பிரதேசத்தில் மாநகரசபை முன்றலில் இன்று (15.05.2021) சனிக்கிழமை மே 18 கவனயீர்ப்பும்

வணக்கநிகழ்வும் நடைபெற்றன.

நிகழ்வில் மாநகரமுதல்வர்,மற்றும் துணை முதல்வர்ஷ கலந்து கொண்டதுடன் முள்ளிவாய்க்கால் நினைவு பொதுச்சுடரினை முதல்வர் அப்துல் சடி அவர்கள் ஏற்றிவைக்க பொபினி பிராங்கோ தமிழ்ச்சங்க தமிழ்ச்சோலை நிர்வாகி ஈகைச்சுடரினையும் ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. நினைவுரையை தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் ஆற்றினார்.
 
பொபினி முதல்வர், துணை முதல்வர், பிராங்கோ தமிழ்ச்சங்கங்களின் அரசியல் பிரிவுப்பொறுப்பாளர், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரதிநிதிகள் தமிழ்மக்கள் பிள்ளைகள்,குழந்தைகள் என பலர் பங்குபற்றியிருந்தனர். பிற்பகல் 13.00 மணிவரை நினைவேந்தல் நடைபெற்றது.

No comments