பிறந்த நாள்:சிங்கள மொடல் அழகியும் கைது!தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி, கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் பிறந்தநாள் நிகழ்வை நடத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் சிங்கள மொடல் அழகி ஒருவர் மற்றும் அவரது அழகுக்கலை கலைஞர் என இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் கடும் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ளது. அனைத்துவிதமான களியாட்ட நிகழ்வுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நட்சத்திர விடுதியொன்றில் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதாக கூறி நேற்றிரவு குறித்த சிங்கள மொடல் அழகி மற்றும் அவரது அழகுக்கலை கலைஞர் என இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

No comments