ஐரோப்பிய அதிகாரிகளை உளவு பார்க்க அமெரிக்க உளவாளிகளுக்கு உதவியது டென்மார்க்!


ஜேர்மனி சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் உள்ளிட்ட ஐரோப்பிய அரசியில்வாதிகள் மீது அமொிக்கா உளவு பார்க்க டென்மார்க்கின் இரகசிய சேவை உதவியதாக டெனிஷ் வானோலி (DR) செய்தி வெளியிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை டென்மார்க்கின் பாதுகாப்பு புலனாய்வு சேவை (FE) அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனத்துடன் (NSA) ஒத்துழைத்து தகவல்களைச் சேகரிக்கிறது என்று தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஜேர்மனி, பிரான்ஸ், சுவீடன், நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் மீது புலனாய்வுத் தகவல்கள் சேகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுபோன்று குற்றச்சாட்டுகள் 2013 ஆண்டில் வெளிவந்தன. அத்துடன்  அமெரிக்க விசில்ப்ளோவர் எட்வர்ட் ஸ்னோவ்டென் கசியவிட்ட இரகசியங்கள் ஜேர்மன் அதிபரின் தொலைபேசியை என்.எஸ்.ஏ ஒட்டுக்கேடாடதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனாலும் அக் குற்றச்சாட்டுகள் வெள்ளை மாளிகை எந்தவிதமான மறுப்பையும் தெரிவிக்கவில்லை.  

ஜேர்மனி ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் மற்றும் அங்கேலா மேர்க்கலின் செய்தித் தொடர்பாளர் ஆகியோர்  டெனிஷ் வானொலி செய்தி வெளியிடும் வரை தங்களுக்கு இதுபற்றி எதுவும்  ஈடுபாட்டைப் பற்றி தெரியாது என்று கூறியுள்ளனர்.

டி.ஆர் செய்திகளின் படி, அரசியல்வாதிகளின் தொலைபேசி எண்களை ஒட்டுக் கேட்பதற்குப் கேபிள்களிலிருந்து தரவைப் பெற என்.எஸ்.ஏ அனுமதித்ததாக "ஆபரேஷன் டன்ஹாம்மர்" என்ற குறியீட்டுப் பெயரில் கூறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

No comments