அம்பலமானது கொழும்பு முடக்க சீத்துவம்!கொரோனாவை கட்டுப்படுத்த பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளை எதிர்வரும் ஜுன் மாதம் 15 ஆம் திகதி வரையில் இரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில் கெர்ழும்பில் முடக்க நிலையை அம்பலப்படுத்தியுள்ளார் மக்கள் சக்தியை சேர்ந்த உமாசந்திரபிரகாஸ்.

அரசு நாடாளவிய முடக்கத்தாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமென பிரச்சாரப்படுத்திக்கொண்டே இத்தகைய பொதுவெளியை திறந்துவிட்டுள்ளமையை அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

இதனிடையே தற்போதைய கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காகவும் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை செயற்படுத்துவதற்கு பொலிஸாரின்; தேவை அவசியமாகியுள்ளதாலும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இம்மாதம் 11 ஆம் திகதி முதல் இன்று (31) வரையில் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments