விஜயதாஸ ராஜபக்ஷவின் மகன் கைது!!


சிறீலங்கா ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இராஜகிரிய பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பிலேயே ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விபத்தில் 4 பேர் காயமடைந்திருந்தனர்.

அண்மைய நாட்களாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜக்ஷவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அச்சுறுத்தியதாக  குறிப்பிட்டுள்ளார். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய 69 இலட்ச மக்களுக்கு அரசாங்கம் துரோகமிழைத்துள்ளது எனத் தெரிவித்ததையடுத்து முரண்பாடுகள் வலுத்து வருகின்றமை இங்கே நினைவூட்டத்தக்கது.

No comments