சினோபார்ம் தடுப்பூசி சிறந்தது! இதுவரை இறப்புக்கள் இல்லை!


சினோபார்ம் தடுப்பூசியை போட்டுக்கொண்டால் நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது 93 சதவீதம், தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) சேர்வது 95 சதவீதமும் தடுக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக இதுவரை சினோபார்ம் தடுப்பூசி மருந்தை உடலில் செலுத்திக் கொண்டவர்களில் இறப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினோபார்ம் தடுப்பூசி கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தி, உடலில் அதிக நாட்கள் ஒட்டிக்கொள்வதன் மூலம் சிறந்த எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதில் அந்த தடுப்பூசியானது 90 சதவீதம் நோய் தொற்றை தடுப்பதில் அதிக ஆற்றல் உடையது. எனவே இந்த தடுப்பூசி மருந்து கொரோனா பரவலை தடுப்பதில் மிகவும் பாதுகாப்பானதாக உள்ளது.

சினோபார்ம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் தற்போதுள்ள கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளில் சினோபார்ம் உலகின் மிகச்சிறந்த மருந்தாகும்.

No comments