10 மணி நேரம் கெடு! இல்லையேல் போராட்டம்!


வவுனியா திருநாவற்குளத்தில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்ட தொடரூந்துக் கடவைக்கு  அடுத்த 10 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு ஊழியர் ஒருவரை நியமிக்க வேண்டும். இல்லையேல் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை காலை குறித்த கடவையில் இடம்பெற்ற  தொடரூந்து விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பாதுகாப்பற்ற தொடரூந்துக்  கடவையில் பணியில் ஈடுபட்டு வந்த காவலாளிக்கு காவல்துறையினரால் வழங்கப்படும் கொடுப்பனவு  வழங்கப்படாத நிலையில் அவர் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் பணியில் ஈடுபடுவதை நிறுத்தியுள்ளார்.  

குறித்த பாதுகாப்பற்ற கடவைக்கு ஊழியர் ஒருவரை நியமிக்குமாறு  நாம் பலமுறை கோரிக்கையினை விடுத்தும் அது பொலிசாராலும், புகையிரத திணைக்களத்தினாலும் நிறைவேற்றப்படாமல் தட்டிக்கழிக்கப்பட்டு வருகின்றது. 

இந்நிலையிலேயே இன்று குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

No comments