தைவானில் தொடரூந்து விபத்து! 36 பேர் பலி!!


தைவானில் ஒரு சுரங்கப்பாதையில் ஏறக்குறைய 500 பேர் சென்ற தொடரூந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 36 பேர் இறந்துள்ளனர், 200 பேர் வரை சிக்கியுள்ளனர்.

தைவானின் தை துங் நகருக்கு ஹூலியன் நகரில் இருந்து 500 பேருடன் பயணிகளுடன் தொடரூந்து வந்து கொண்டிருந்தது. தொடரூந்துச் சுரங்கப்பாதை கடக்க வேகமாக பயணித்து கொண்டிருந்தது. 

அப்போது பாரவூர்தி ஒன்றின் மீது தொடரூந்து மோதியதாக கூறப்படுகிறது. மோதிய வேகத்தில் தடம் புரண்ட தொடரூந்து, சுரங்கப்பாதையின் சுவர்களில் மோதியது. இந்த பயங்கர விபத்தில் தொடரூந்தில் பயணம் செய்த 36  பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்  72 பேர் காயமடைந்தனர்.

மோசமாக சேதமடைந்த பல தொடரூந்துப் பெட்டிகளை மீட்க மீட்க முயற்சித்ததால், பலர் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் தைபே முதல் தைதுங் வரை தொடரூந்து நீண்ட வார இறுதி விடுமுறைக்கு மக்களை ஏற்றிச் சென்றது.

தொடரூந்தில் மக்கள் அதிகமாக இருந்ததால் பலர் நின்று கொண்டு பயணித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

காயம் அடைந்தவர்களில் 60 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

No comments