வவுனியாவில் போதைப் பொருளுடன் ஐவர் கைது!


வவுனியாவில் போதை பொருட்களுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.

வவுனியா காவல்துறையின் விசேட நடவடிக்கையினை போது வவுனியாவின் பல்வேறு பகுதிகளின் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்தோடு இவர்களிடம் இருந்து ஹெரோயின் மற்றும் கஞ்சா மீட்கப்பட்டது. 

இதில் வைரவபுளியங்குளம் பகுதி மற்றும் சிவபுரத்தை சேர்ந்த இருவர்களிடம் இருந்து 620 மில்லிக்கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மற்றைய மூவரிடம் இருந்து 04 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

No comments