புத்தாண்டில் மூன்றாவது கொரோனா அலை


புத்தாண்டில் மூன்றாவது கொரோனா அலை ஏற்படுவதற்கான அவதானம் இருப்பதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ​தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் வர்த்தக நிலையங்களுக்குச் சென்றமை, வர்த்தக நிலையங்களுக்குள் கூடியிருந்தமை என்பவற்றைப் பார்க்கையில், கொரோனா 3ஆவது அலை உருவாக வாய்ப்புள்ளதென்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, புத்தாண்டை மிகவும் சுகாதார பாதுகாப்புடன் கொண்டாடுவதற்கான ஆலோசனை​கள் அடங்கிய வழிகாட்டல்களை இன்று வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகளை கட்டுப்படுத்த எதிர்பார்த்துள்ளதுடன், குழுக்களாக இணைந்து விளையாடும் வி​ளையாட்டுக்கள் தவிர்த்து, தனியாக விளையாடும் விளையாட்டுகள் குறித்து கவனம் செலுத்துவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

No comments