தராகி சிவராமின் நினைவேந்தல் யாழில்!

 மறைந்த ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராமின் நினைவேந்தல் யாழ்.ஊடக அமையத்தில் இன்று கொரோனா அச்சத்தின் மத்தியிலும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்கள் பங்கெடுப்புடன் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தலில் நினைவுப்பேருரையினை தராகி சிவராமின் நண்பரும் மூத்த ஊடகவியலாளருமான வித்தியாதரன் ஆற்றியிருந்தார்.கொள்கை மற்றும் கருத்து அடிப்படையில் தராகி சிவராமுடன் முரண்பட்டவனாக இருந்த போதும் இன்று வரை நிரப்பப்படாத வெற்றிடமாக உள்ளதாக தெரிவித்த வித்தியாதரன் தனது ஒரேயொரு மகனிற்கு சிவராம் எனவும் பெயர் சூட்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.  

No comments