பிராண்டிக்ஸ் கொத்தணியில் 1419:திருமலை முடக்கம்!

திருகோணமலை மாவட்டத்தில் கிராம சேவகர் பிரிவுகள் பல, மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டுள்ளன. 

இன்றுக்காலை 7 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையிலேயே இந்த கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன என இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று வியாபிப்பதைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

உப்புவெளி பொலிஸ் பிரிவில்-சுமேதங்கபுரம் கிராம சேவகர் பிரிவு,

திருகோணமலை பொலிஸ் பிரிவில்- மூதூர் கிராம சேவகர், கோவிலடி கிராம சேவகர்பிரிவு, லிங்காநகர் கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

சீனக்குடா பொலிஸ் பிரிவில்- கவட்டிகுடா கிராம சேவகர், சைனாபே கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நேற்று (28) ஒரேநாளில் 1466 ஆக இருந்தது.

அதில், பிராண்டிக்ஸ் கொத்தணியில் 1419 பேருக்கும், சிறைச்சாலை கொத்தணியில் 32 பேரும், வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களில் 15 பேரும் அடங்குகின்றனர்.
No comments