உபெரில் முகக் கவசம் அணிய மறுத்த பெண் கைது!


அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவில் உபெர் வாடகை வண்டியில் முகக் கவசம் அணி மறுத்த பெண் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முகக் கவசம் அணி மறுத்த 24 வயதுடைய மலேசியா கிங் என்ற பெண் கோபங் கொண்டு ஓட்டுநர் நோக்கி இருமல் இருப்பதாகக் கூறி இருமிக் காட்டியமை, ஓட்டுநரின் முகக்கவசத்தை அறுத்தெறிந்தமை, தாக்க முற்பட்டமை, மீது மிளகுத் தண்ணீர் தெளித்தமை, நகரின் சுகாதார மற்றும் பாதுகாப்பு சட்டங்களை மீறியமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை அவர் எதிர்கொள்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

32 வயதான உபெர் ஓட்டுநர் சுபாகர் கட்கா காவல்துறையினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் பயணிகளை முகக்கவசம் அணியுமாறு கோரிபோது முகக்கவசம் அணிய மறுத்தமை, தனது முகக்கவசத்தை அறுத்தமை, சந்தேக நபர்களில் ஒருவர் தனது திறன்பேசியைத் திருட முயன்றது மற்றும் மிளகு தெளிப்பு பயன்படுத்தப்படுத்திமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

No comments