இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்! 33 பேர் கைது!

இங்கிலாந்தில் முடக்கநிலையின் போது அமைதியான போராட்டத்தை அனுமதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை

வலியுறுத்தியதை அடுத்து, லண்டனில் முடக்கநிலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைடே பார்கிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் வரை மக்கள் அணிவகுத்துச் சென்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது கொவிட்ட கட்டுபாடுகளை மீறிச் செயற்பட்டதால் குறைந்தது 33 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்''.

ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை எதிர்பார்ப்புகளை மீறியுள்ளது என ஸ்காட்லாந்து தெரிவித்துள்ளது.

தற்போதைய கொரோனா வைரஸ் விதிகளின் கீழ் மக்கள் போராட்டங்களில் கலந்துகொள்வது இன்னும் சட்டவிரோதமானது என்று பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.


No comments