டெஸ்லா மகிழுந்துகள் வேவு பார்க்க பயன்பட்டால் நிறுவனம் மூடப்படலாம்


அமெரிக்காவின் மின்சார மகிழுந்து நிறுத்துவனமான டெஸ்லா தாயாரிக்கும் மகிழுந்தை வேவு பார்ப்பதற்காகக் பயன்படுத்தினால் டெஸ்லா நிறுவனம் மூடப்படும் வாய்ப்பு உள்ளதாக டெஸ்லாவின் தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் கூறியுள்ளார்.

சீன வணிக மன்றத்தில் காணொளி இணைப்பு மூலம் நடத்திய சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சீனாவை உளவு பார்க்க டெஸ்லா வாகனங்கள் பயன்படுத்தப்பட்டால் தனது நிறுவனம் மூடப்படும் என்றார். டெஸ்லா மகிழுந்துகளை சீனாவின் இராணுவம் அதன் வசதிகளுக்கு தடை விதித்துள்ளது என்ற செய்திகளுக்கு பதிலளிக்கும் போது  அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

டெஸ்லா மகிழுந்துகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் சேகரித்த தரவுகள் குறித்து சீன இராணுவம் பாதுகாப்பு கவலைகளை எழுப்பியது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக டெஸ்லாவின் மிகப்பெரிய சந்தையாக சீனா உள்ளது. இது 2020 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் உலகளாவிய விற்பனையில் கால் பங்கைக் கொண்டுள்ளது.

வெளிநாட்டு அரசாங்கத்தை வேவு பார்ப்பதற்கு எங்களது மகிழுந்துகள் பயன்பட்டால் எங்கள் நிறுவனத்திற்கு எதிர்மறையான விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என எச்சரித்தார்.


டெஸ்லா சீனாவிலோ அல்லது எங்கும் உளவு பார்க்க மகிழுந்துகளைப் பயன்படுத்தினாலும் எங்கள் நிறுவனம் மூடப்படலாம் என்றார்.

No comments