ஜெனீவாவில் நீதி கோரிப் போராட்டம்!!

தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி     ஐநா முன்பு தமிழர்கள் ஒன்று திரண்டு 01 .03 .2021  இன்று

மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

46 வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பித்து நடந்துகொண்டிருக்கும்  இவ்வேளையில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சுவிஸிலுள்ள தமிழர்கள் ஒன்றிணைத்து மாபெரும் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

பிற்பகல் 14:30 மணியளவில் ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டத்தில் சுமார் ஒருமணி நேரமாக தமிழ் உறவுகள் நீதி கேட்டு உரத்தகுரலில் உரிமைக்குரல்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

அத்தோடு ஐ.நா மனித உரிமையாளர் அலுவலத்துடன் ஏற்பட்ட சந்திப்பு தொடர்பான தொகுப்பும் இடம்பெற்றது.

கொரேனா தொற்று உச்சம் பெற்றிருக்கும் இந்நிலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பல நூற்றுக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு தமது உணர்வினை வெளிப்படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments