முதலமைச்சர் யாரென தெரியாது:சம்பந்தன்!

 


மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் அரசாங்கம் இன்னமும் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதையும் விடுக்கவில்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர்கள் தொடர்பில் இப்போதைக்கு நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. வேட்பாளர்கள் குறித்து உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கூட்டமைப்பின் வடமாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் தங்களிடம் நல்ல தெரிவு இருப்பதாக ரெலோ அறிவித்துள்ளது.

கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனையும் வடக்கில் மாவை சேனாதிராசாவையும் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த மாகாண சபை தேர்தலில் அவர் தனது இடத்தை விக்னேஸ்வரனுக்கு விட்டுக் கொடுத்தார். இம்முறை அப்படியான முடிவை எடுக்கக்கூடாது. அவரது தலைமையில் இளைஞர்களை களமிறக்க வேண்டும் என ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments