அம்பிகைக்கு ஆதரவாக பிரான்சில் கவனயீர்ப்புப் போராட்டம்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை  போராட்டத்தின் தொடர்ச்சியாக எமது போராட்டத்தின் அவசியத்தை பிரான்சு அரசின் கவனத்தை ஈர்க்கும்

நோக்கோடும், அறப்போராளி அம்பிகையின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக் கோரியும் பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் தமிழர்கள் ஒன்றுதிரண்டனர்.

கொவிட்-19 சட்டவிதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழுணர்வாளர்கள் உணர்வெழுச்சியுடன்

அறப்போராளி அம்பிகைக்கு ஆதரவாக ஒன்றுகூடித் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

அம்பிகையின் 4 அம்சக் கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஏந்தி வீதியின் ஓரத்தில் நின்று ஒலிவாங்கி மூலம் ஆதரவுக்குரல்களை எழுப்பியிருந்தனர்.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரெஞ்சு மொழியில் உரைகளும் இடம்பெற்றன.

தொடர்ந்து எதிர்வரும் 17.03.2021 புதன்கிழமையும் குறித்த கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments