சட்டம்,ஒழுங்கை கோரி கிளியில் ஆர்ப்பாட்டம்!


கிளிநொச்சியில் கட்டுக்கடங்காது அதிகரித்துள்ள கஞ்சா கசிப்பு உட்பட சட்டவிரோத செயல்களுக்கு எதிராகவும் அதன் பின்னணியில் இருப்பவர்களால் கொல்லப்பட்ட அருளம்பலம் துஸ்யந்தனக்கு நீதி கோரியும் வட்டக்கச்சி மக்களால் கண்டன பேரணியொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இலங்கை காவல்துறையின் ஆசீர்வாதத்துடன் நடப்பதாக சொல்லப்படுகின்ற கஞ்சா கசிப்பு உட்பட சட்டவிரோத செயல்களின் சூத்திரதாரிகளை இலங்கை காவல்துறையே பாதுகாப்பதாகவும் அவர்களை கண்டுகொள்ளாதிருப்பதாகவும் தெரிவித்தே மக்கள் ஆர்ப்பாட்டத்த்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments