அங்கயனிடம் ஆயுதமா இல்லை:யோகேஸ்வரி கேள்வி!அரசியலுக்கு அனுபவமற்ற தான் நிராயுதபாணியாக அரசியலுக்குள் வந்தவனாம் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவர் அங்கயன் கூறுகின்றார்.

2010 ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாண வருகை தர இருந்த மகிந்த ராஜபக்ச அவர்களின் தேர்தல் பிரச்சாரத்திற்காக கூட்ட ஒழுங்கை துரையப்பா விளையாட்டரங்கில் பார்வையிட்டு திரும்பும் வழியில் அதுவும் நடு நிசியில் அங்கயனும்,அவரது அராஜக கோஸ்டியினரும் துப்பாக்கியுடன் என்னை நோக்கி ஓடிவந்து வாகனத்தை அடித்து நொருக்கி என்னை மிரட்டி என்னை சுடவந்ததை மறந்தா கூறுகின்றார் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணம்.

தான் நிராயுதபாணியாக அரசியலுக்கு வந்தவர் என்று யாருக்கு கதை சொல்லுகின்றார? எனவும்  யோகேஸ்வரி பற்குணம் கேள்வி எழுப்பியுள்ளார்.No comments