திருமலையில் தொடரும் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம்!


காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட தலைவி திருமதி. நா. ஆஷா மற்றும் திருமதி இரா. கோசலாதேவி இருவரும் இன்று புதன்கிழமை (17.03.2021) 3 ஆவது நாளாக திருகோணமலை  சிவன் ஆலய முன்றலில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

திருகோணமலை மாவட்ட தலைவி திருமதி நா.ஆஷா கருத்து தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கத்தினுடாக எவ்வித தீர்வும் கிடைக்கப் பெறாமையினாலேயே எமது போராட்டங்களை நாங்கள் சர்வதேசத்தை நோக்கி நகர்த்தியிருக்கின்றோம் என்றார்.

மேலும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி பெண்கள் எத்தனையோ பேர் கண்ணீருடன் வீதியில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்,  அவர்களின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனமெடுத்து செயற்படுத்த வேண்டும் என வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.No comments