பொத்துவில் சுடலையையும் விட்டு வைக்காத புத்தர்!
பொத்துவில் பிரதேசத்திலுள்ள சங்குமண்கண்டிக் கிராம மயானப்பகுதியில் புத்தர் சிலை அமைக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இந்தச் சம்பவம், நேற்று (28) இடம்பெற்றுள்ளது.
அங்கு வந்த பௌத்தபிக்கு தலைமையிலான குழுவினருக்கு பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததையடுத்து அவர்கள் பின்வாங்கினர்.
பொத்துவில், முகுதுமகாவிகாரை பௌத்தபிக்கு தலைமையிலான குழுவினர் எமது மயானப்பகுதியில் புத்தர்சிலை அமைப்பதற்காக கொங்கிரீட் தூண் முதலான பொருட்களுடன் வந்திறங்கிய நிலையில் மக்களிற்கு தெரியவரவே, அங்கு மக்கள் ஒன்றுகூடியமையால் நிலைமை பதட்டத்துக்குள்ளானது.
வன இலாகா கட்டைபோட்ட பகுதி என்பதால் தாங்கள் சிலை வைப்பதில் பிரச்சினையில்லையென வாதம் புரிந்தார்கள். மக்களின் காணிகளை வன இலாகா கட்டைபோட்டு வைத்துள்ளது. அதைவிட இது மக்கள் வாழும்பகுதி. அவர்கள் இங்கு புத்தர் சிலை வருவதை விரும்பவில்லை. எனவே, இங்கு பிரச்சினையை எழுப்ப வேண்டாம் என மக்கள் வலியுறுத்தி எதிர்ப்பு வெளியிட்டதையடுத்து முயற்சியை கைவிட்டு வெளியேறியுள்ளனர்.
Post a Comment