டாணுக்கும் விசாரணையாம்?


யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் தொலைக்காட்சியொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.எனினும் விசாரணையின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு இயங்கும் தொலைகாட்சி ஒன்றின் ஊடகவியலாளரான பு.சுலக்சன் என்பவரையே பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இன்றைய தினம் கொழும்பிற்கு அழைத்து விசாரணை செய்த பின்னர் விடுத்துள்ளனர். 

புலம்பெயர் நாட்டில் வசிக்கும் செயற்பாட்டளர் என அடையாளப்படுத்தப்பட்ட நபருடன் ஊடகவியலாளர்  முக புத்தகத்தில் நட்பில் இருந்தமை தொடர்பில்லையே விசாரணைக்கு அழைக்கப்பட்டு சுமார் மூன்று மணிநேர விசாரணையின் பின்னர் விடுத்துள்ளனர்.

இதனிடையே யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் மற்றொரு வலைத்தொலைக்காட்சி விசேட அதிரடி படையால்; சுற்றிவளைக்கப்பட்டதுடன் அதன் பணியாளர்கள் கைதாகியுள்ளனர்.

வலைத்தொலைக்காட்சியக உடமைகளையும் எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

தற்பொழுது இலங்கை காரியாலயம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments