வலைத் தொலைக்காட்சி பணியாளர்கள் இருவர் கைது!


யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் மற்றொரு வலைத்தொலைக்காட்சி (யூரியூப்) விசேட அதிரடி படையால் சுற்றிவளைக்கப்பட்டதுடன் அதன் பணியாளர்கள் இருவர் கைதாகியுள்ளனர்.

அரியாலையில் உள்ள குறித்த இணையதள அலுவலகத்தை இன்று காலை விசேட அதிரடி படையினர் சுற்றி வளைக்கப்பட்டு வலைத்தொலைக்காட்சியக உடமைகளையும் (ஐந்த மேசைக் கணனிகள், ஐந்து மடிக்கணினிகள் ) எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

தற்பொழுது இலங்கை காரியாலயம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது   தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளை இவர்கள் ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

No comments