ஈழம் மலரும் மட்டும்......

அலையோடு அலையாக நிலம் மீளும்
அசைந்தாலும் கொடி ஈழத் தலைசீவும்
விசையோடு கடற்புலி அலை தாவும்
இசையோடு புலிக்கொடி அசைந்தாடும்
தலைவன் புகழ் தரணியிலே தழைத்தோங்கும்
தமிழீழ நாடு உலகில் செழித்தோங்கும்

பணிபிலே உயர்ந்து ஈழத்திரு நாடு
வம்பிலே வருவோர்க்கு விழும் உயிர்ச்சூடு
பண்டார வன்னியன் படை நடந்த காடு
பணியாது ஒரு நாளும் ஈழவள நாடு
கரிகாலன் பெயர் சொல்லி வானுயரும்
கரியபுலியாகி நீ வெடி சுமந்து ஆடு

எங்கள் உடலில் உள்ள இரத்தம்
இருக்கும் வரையில் தொடரும் ஈழ யுத்தம்
உடலின் சிதைவுச் சத்தம்
தொடரும் ஈழம் மலரும் மட்டும்.

சத்தியன் (போராளி)

No comments