மகனுக்கு அன்புடன் அம்மாவின் வாழ்த்து

அன்புமலையில் தழுவிச்செல்லும் முகிலே
அறிவுக்கடலில் முன்னேறி அழகூட்டும் படகே
சிந்தனைத் தோட்டத்தில்
செழித்து வளரும் பயிரே
வேக அருவியில் நிதானித்துச் செல்லும் பூவே
விவேகச் சாலையில் வழிகாட்டும் ஒளியே
ஆளுமை வானத்தில் குளிர் பொழியும் நிலவே
வாழ்க பல்லாண்டு
வாழும் காலமெல்லாம் புகழ்பூண்டு.

No comments