நிமிர், காலத்தைப் பிரதிபலி

எழு,
கனலேந்து கண்மணி...
நின்னையும் எனது
சுயத்தையும்
தகர்த்திடவென
தொலைத்திடவும் - எனது
அடையாளத்தை அழித்திடவுமென
அரக்கர் துடிப்பதனை – அன்பே
நீ அறியாயோ?
ஐயோ – என் இனியவளே
துன்பச் சுமையூறிய
கனவு நிறைந்த – எனது
கண்களால் எனைப் பார்க்காதே
நிமிர்,
காலத்தைப் பிரதிபலி …
இது,
நீயும் நானும் பகிர்ந்தளித்த
நிம்மதித் தூக்கத்திற்கான
நேரமல்ல
எழு,
கால்களில் குதிரை பூட்டு
கண்களில் கனலை ஏந்து …
எழுகையின் அறுவடை
விடியலாகட்டும் …

No comments