அகிம்சையின் சிகரத்துக்கு முடிசூட்டியவன் திலீபன்


மரகத நிலமும் மாதவ மொழியும் பெருமைகள் நிறைந்த எம் தேசத்தின் விடிவில் தம்மை அர்ப்பணித்த தியாகிகளின் வரலாற்றிலே திலீபன் வித்தியாசமான மாவீரன். செந்தமிழும் கலையழகும் சேர்ந்து விளங்கும் தமழீழ மண்ணிலே அகிம்சையின் அகல்விளக்காய்! அணையாத திபமாய்! இன்றும் சிறந்து விளங்குபவர் திலீபன் அண்ணா. எங்கள் தேசத்திலே எதிரிகளின் கொடுமைகளால் வெந்துபோன தமிழினத்தின் விடுதலையை முன்சுமந்த தேசிய வீரன்! அடக்குமுறைச் சட்டங்களை அதிகார வெறித்தனத்தை ஒடுக்க நினைத்த இனவெறியர் படைகளையும் எதிர்த்துநின்ற புலிவீரன். தாய்மண்ணை ஆக்கிரமிக்க வந்த சிங்களப்படைகளை களத்திலே எதிர்த்துச் சீறியெழுந்த வேங்கையிவன். தாய்மண்ணின்மேல் தணியாத தாகத்துடன் களமாடும் போது களப்புண் பட்டதினால் யாழ்ப்பாண அரசியல் தறைப் பொறுப்பளனாய் பணிபுரிந்தார்.

கல்வியிலே சிறந்தவனாய் மருத்துவத் துறைமாணவனாய் இருந்தும் கூட தாயத்தின் சுதந்திரத்தை உயிர் மூச்சாய் நேசித்தவர். மண்ணின் விடிவுக்காய் தன்னை அரப்பணித்த மாபெரும் தியாகி. ஆதிக்க வெறியர்களின் அக்கிரமிப்பை எம் மண்ணிலிருந்து அகற்ற வேண்டும் என்ற இலட்சியத்தை மூச்சாக்கிக் கொண்டார். இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும். சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று சீறியெழுந்தார்.

1987ம் ஆண்டிலே இந்திய அமைதிகாக்கும் படைகள் எமது மண்ணில் தளங்களை அமைத்துக்கொண்டன. எம்மக்களின் சுதந்திர வாழ்வுக்கு வழிகாட்ட வந்தவராய் இழந்த உரிமைகளை ஈழத்தமிழர் பெற்றுவாழ இறுதிவரை உழைப்பபோம் என்று அமைதிப படைகளாய் அடியெடுத்து வைத்தார்கள். எங்கள் தேசத்து இனியதமிழ் மக்களெல்லாம் மாவிலைத் தோரணங்களோடு குத்துவிளக்கேற்றி அமைதிப்படைகளை வரவேற்று நின்ற காலம். அமைதிக்காக்க வந்தவர்கள் எங்கள் அமைதிக்குத் தீ மூட்டினர். சிறீலங்கா இனஅழிப்பு திட்டங்களுக்கு இந்திய அரசும் துணைபோகின்றது. வங்கதேசத்து வக்ரப் படைகளால் எங்கள் தேசம் கண்ணீர் வடித்தது. இந்திய வல்லாதிக்கவாதிகளின் கொடுமையால் தமிழினம் சிந்திய குருதியில் மண் சிவந்துபோனது.

இந்நிலை தடுக்க எழுந்தான் திலீபன். காந்தி காட்டிய வழியிலே அகிம்சைப் போராட்டத்தில் இறங்கினார். நல்லை நகர் வீதியிலே! கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமின்றி அமைதியாய் சத்தியத்தின் வழியிலே சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். தமிழீழ விடுதலையில் பெண்களும் இணைந்து செயற்படும் எழுச்சியைத் தந்தவன் இவன். எங்கள் தமிழ் மண்ணில், இடர்தாங்கி 12 நாட்கள் பகைவனின் முன்னால் நீர்கூட அருந்தாமல் யாகம்புரிந்த மாவீரன். இந்தியப் படைகள் செய்வதறியாது கிலிகொண்டு ஓடின. தடுக்க முனைந்தனர். தமிழீழ மக்களின் இலட்சியதடதை முறியடிக்க தாண்டவமாடினர். சூட்சிகள் செய்து சதந்திர ஒணர்வுகளை மாற்றிட நினைத்தது அமைதிப்படை! அஞ்சினார்க்குச் சதாமரணம் அஞ்சாத நெஞ்சத்து ஆடவர்க்கு ஒருமரணம் என்ற அகிம்சையின் தத்துவத்தை உலகிற்கும் உரத்து நின்றான். அவருடைய ஐந்து அம்சக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தியாகம் தொடர்ந்தது. தேசியத் தலைவனின் அன்புக்குரிய தம்பி திலீபன் படுத்த படுக்கையானார். சொல்லொணத் துயரத்தில் மக்கள் துடித்தனர். தேசம் திரண்டு கண்ணீர் விட்டது. தமிழீழமெங்கும் மக்கள் வெள்ளம்! நீதி கேட்டு நிமிர்ந்தனர் தமிழர். சாவைவென்ற சத்திய வீரன் சொன்னான் மக்கள் புரட்சி வெடிக்கின்ற போது எங்கள் தாயத்தின் கொடி கோட்டையில் பறக்கும் என்றார். அவருடைய கனவு இன்று நனவாகி நிற்கிறது. தேசம் இன்று தலை நிமிர்ந்து கொண்டது.


அகிம்சையியை உலகிற்கு உணர்த்திய காந்தி தேசத்தின் கபடங்களை தோலுரித்துக் காட்டியவன். அமைதி காக்க வந்தவரின் அநியாயங்களை அகிலம் உணர்ந்து கொண்டது. தமிழீழத்தை அழிக்க நினைத்தவர்கள் தாமே அழிந்த வரலாற்றை உலகம் உணர்ந்தது. ஈழத்தின் விடிவில் எதிர்கால புதுயுகத்தின் தேசிய வாழ்வில் திரண்டெழும் மக்கள் புரட்சிக்கு வி;த்திட்ட வேங்கையிவன். ஆதிக்க வெறியரை அகிம்சையினால் வென்ற அழியாப் புகழ் கொண்ட திலீபனின் வரலாறு சொல்லி முடியாது. சுதந்திர தமிழீழ விடியலுக்காய் அடித்தளம் அமைத்த இவரின் அழியாப் பணியை நாமும் பின்பற்றி எமது தேசிய வாழ்வுக்கு எங்கள் கரங்களையும் இணைத்துக்கொள்வோம். ஒன்றுபட்ட தமிழினத்தின் ஒற்றுமை உணர்வோடு புதிய விடியலின் பார்வையிலே புலம்பெயர் உறவுகளும் ஒன்றினைவோம்.

குறிப்பு: இக்கட்டுரை தியாக தீபம் திலீபனின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு லண்டன் மாநகரில் நடைபெற்ற போது சிறுமி ஒருவர் ஆற்றிய உரை.

No comments